Pages

Wednesday 10 February 2016

Paati Vaithiyam | Veetu Vaithiyam | பாரம்பரிய Vaithiyam | Nattu Vaithiyam


சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ..!

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.
பொன்னாவாரை பூ - 10 கிராம்
மிளகு - 5
திப்பிலி - 3
சுக்கு - 1 துண்டு
சிற்றரத்தை - 1 துண்டு


இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்
.
பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும்.

பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும்.

உடல் எரிச்சல் தீரும்.

பொன்னாவாரைப் பூவை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு டீ.. காஃபிக்கு பதிலாக இதனை கஷாயம் செய்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பொன்னாவாவாரம் பூ ஆயுளை மட்டுமல்ல, அழகையும் காக்க வல்லது.

0 comments:

Post a Comment