Pages

Wednesday 22 July 2015

தூதுவளை ரசம் செய்முறை விளக்கம் | மருத்துவ குணம் கொண்டது

தேவையான பொருட்கள்: 
  • புளி - பெருநெல்லி அளவு
  • தக்காளி பெரிது - 1
  • துவரம் பருப்பு வேகவைத்தது - 1 கரண்டி
  • துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
  • தணியா - 3 ஸ்பூன்
  • மிளகு - 2 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிது
  • மிளகாய் - 2
  • பூண்டு விருப்பமிருந்தால் - 4 பல்
  • கருவேப்பிலை - சிறிது
  • கொத்தமல்லி - சிறிது
  • மஞ்சள் தூள் - சிறிது
  • உப்பு - தேவைக்கு
  • தூதுவளை இலை ஆய்ந்தது - 1 பிடி
  • தாளிக்க 
  • நல்லெண்ணை,கடுகு,பச்சை மிளகாய் -1

தயார் செய்யும் முறை: 
  • முதலில் வாணலியில் துவரம் பருப்பு  1 ஸ்பூன்,தணியா,மிளகு,சீரகம்,மிளகாய் - 2,பூண்டு,தூதுவளை இலை எல்லாம் வறுத்து தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். 
  • புளியை  நீரில்  கரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதித்த பின் ரச மசாலாவை சேர்க்கவும். வேகவைத்தப் பருப்பை சேர்த்து, உப்பு சேர்க்கவும்.வாசனை வந்ததும் இறக்கி நல்லெண்ணையில் கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். 

0 comments:

Post a Comment