Pages

Thursday 21 May 2015

சுவையான இறால் கபாப் செய்முறை விளக்கம் (Prawn Kabab Recipes Free)


தேவைப்படும் பொருட்கள் : 

  • இறால் – 10
  • இஞ்சிபூண்டு விழுது – 3 டீஸ்பூன்
  • தயிர் – 2 கப்
  • கிரீம் – 2 கப்
  • கிராம்பு – 2
  • எலுமிச்சைபழச்சாறு – 3 டீஸ்பூன்
  • கடலை மாவு – 3 டீஸ்பூன்
  • வெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

  • முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, நன்கு நீரை வடித்துக் கொள்ளவும். ஒரு பௌலில் தயிர் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  • பின் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த பேஸ்டுடன் கிராம்பு பொடி, கடலை மாவு, இஞ்சிபூண்டு விழுது மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அந்த கழுவிய இறால் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் அதனை மூடி வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அந்த இறாலானது 2 மணிநேரம் ஊற வேண்டும். ஊறியதும் அதனை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து விட வேண்டும். பின் 30 நிமிடம் வெளியே வைக்க வேண்டும்.
  • பிறகு தந்தூர் ஓவனை (tandoor oven) சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் அந்த இறாலைப் வேக வைக்கவும். இறாலானது பொன்னிறமாக ஆனதும் அதன் மேல் வெண்ணெயை தடவி 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • பின் அதனை எடுத்து அதன் மேல் எலுமிச்சைபழச்சாறு விட்டு பரிமாறவும். இப்போது சுவையான இறால் கபாப் ரெடி!!! இதனை மிளகாய் சாஸ் உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment